Menaka Mookandi / 2010 ஜூலை 11 , மு.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்ட கரித்தாஸ் எகெட் நிறுவகத்தின் இயக்குனர் அருட்தந்தை தேசமான்ய கலாநிதி த. சிறிதரன் சில்வெஸ்ரர் அடிகளார், பேராசிரியர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்தியாவின், பெங்களூர் நகரில் அமைந்துள்ள கல்வி முகாமைத்துவம் மற்றும் சமூக சேவைகள் என்னும் நிறுவகத்தின் "சர்வோட்டம் - நியு டில்லி" என்ற அமைப்பினால் கடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி நடத்தப்பட்ட "கற்றறிவாளர் விருது - 2010" விழாவின் போதே அவருக்கு இந்த விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, கல்விசார், தகுதிகாண் திறமைகள், தேசிய சமூக ரீதியான திறன்மிகு அளப்பெரிய சேவையினைப் பாராட்டியே அருட்தந்தைக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக பெற்றோலியக் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.சுசில் பிரேமஜயந்த, இராஜஸ்தான் மாநில அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஸ்ரீ அய்மதுன் அஹமட் ஹான் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
பேராசிரியர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட அருட்தந்தை சிறிதரன் சில்வெஸ்ரர் அவர்கள், 1993ஆம் ஆண்டு குருவாக திருநிலைப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து திருமலை, மூதூர், கல்லாறு ஆகிய பணித்தளங்களில் குருவாகப் பணியாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, 1998ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரையான 13 வருட காலங்களாக கிழக்கிலங்கை கத்தோலிக்க திருச்சபையின் சமூகப்பணி மையமாகிய கரித்தாஸ் எகெட் நிறுவகத்தின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் இயக்குனராகப் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

3 hours ago
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago
8 hours ago