Menaka Mookandi / 2010 ஜூலை 12 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்னும் ஐந்து வருட காலத்தில் தமிழ் அரச ஊழியர்கள் சிங்களத்தையும் சிங்கள அரச ஊழியர்கள் தமிழையும் கற்று மொழிரீதியாக சமமான நிலமையில் இருக்கக் கூடிய ஒரு நிலைமை ஏற்பட்டுவிடக் கூடும்.
இத்தகைய நிலைமையையிட்டு பெரிதும் மகிழ்ச்சி அடைவதாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.
கடந்த காலத்தில் இடம் பெற்ற அரசியல் நிலைமைகள் மற்றும் அரசியல் தலைவர்கள் விட்ட பிழைகளினால் இந்த நாட்டில் அரசியலில் குழப்பமான நிலைமை ஏற்பட்டதுடன் மொழிப் பிரச்சினையும் காணப்படுகின்றது.
இத்தகைய நிலைமையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். அந்த வகையில் தான் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்கும் போது பொலிஸ் சேவையில் உள்ள 600பேர் மட்டுமே தமிழ் மொழி தெரிந்தவாகளாகக் காணப்பட்டார்கள். ஆனால் இன்று சுமார் 6ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் தமிழைக் கற்றுள்ளார்கள் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை தமிழில் உரையாற்ற முடியாமைக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறிய அவர், வடக்கில் தனது சேவையைத் தொடர்வதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025