2025 ஜூலை 09, புதன்கிழமை

குடாக்களப்பு ஆற்றிலுள்ள மீன்கள் திடீர் உயிரிழப்பு;விசாரணை ஆரம்பம்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 12 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சஜீவ விஜேவீர)

குடாக்களப்பு ஆற்றிலுள்ள பெரும் எண்ணிக்கையான மீன்கள் திடீரென்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவை தேசிய நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பலப்பிட்டியவிற்கும் அம்பலாங்கொடவிற்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதியில் குறித்த ஆறு அமைந்திருப்பதுடன், அப்பகுதியில் வசிக்கும் சுமார் 300 குடும்பங்கள் மீன்பிடித் தொழிலை ஜீவனோபாயத் தொழிலாகக் கொண்டிருப்பதாகவும் ஹிக்கடுவை தேசிய நிலைய அதிகாரி அசங்க குணவர்த்தன தெரிவித்தார்.

கடந்த 4 நாள்களுக்கு முன்னர் குறித்த மீன்கள் எதிர்பாராத வகையில் உயிரிழந்திருந்ததாகவும் அவர் கூறினார். 

எதிர்பாராத வகையில் மீன்கள் உயிரிழக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், இம் மீன்களை உட்கொண்டவர்களும் சுகவீனமடைந்துள்ளனர்.

குறித்த மீனினங்கள் உயிரிழந்தமைக்கான காரணங்கள் எதுவும் தெரியவில்லை எனவும் மீனவர் ஒருவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .