2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

புகை கக்கிடும் வாகனங்களுக்கு கண்டி நகரில் தடை

Menaka Mookandi   / 2010 ஜூலை 12 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி நகருக்குள் பிரவேசிக்கும் புகை கக்கும் சகல வாகனங்களையும் தடைசெய்வதற்கு மத்திய மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது. கண்டி நகரை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்கும் திட்டம் தொடர்பாக கண்டியில் உள்ள போக்குவரத்து அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

சுகாதார அமைச்சு மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி கண்டி நகரிலுள்ள ஐந்து வயதிலும் குறைந்த சிறுவர்களில் அநேகருக்கு சுவாசப்பை தொடர்பான நோய்கள் காணப்படுவதாகவும் இதற்கு கண்டி நகரில் அதிகளவு சஞ்சரிக்கும் புகைகக்கும் வாகனங்கள காரணமாகவுள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உற்குழிவான ஓர் இடத்தில் கண்டி நகர் அமைந்துள்ளது. அத்துடன், நான்கு புறங்களிலும் உயர்ந்த மலைகள் காணப்படுவதன் காரணமாக வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை வெளியேறமுடியாதுள்ளது.

புகையில் அடர்த்தி கூடிய காபனீரொட்சைட் வாயு பெருமளவில் கலந்துள்ளதால் அது வெளியேற முடியாது நகரில் தேக்கம் அடைந்து மக்களின் சுவாசத்துடன் கலக்கிறது. இந்நிலையிலேயே கண்டி நகரில் உற்பிரவேசிக்கும் அதிக புகை கக்கும் வாகனங்களை அனுமதிப்பதில்லை என்ற தீரமானம் குறித்த கூட்டத்தின் போது ஏகமனதாக எடுக்கப்பட்டது.
 
பேராதனை, வில்லியம் கொபல்லவ வீதி என்வற்றில் உடனடியாக ஒற்றை வழிப்பாதையை ஏற்படுத்தல். கண்டியிலுள்ள ஏனைய வீதிகளில் ஒற்றை வழிப்பாதை பற்றி அடுத்தவாரம் முல்படுத்தல்.
கண்டி நகர எல்லையில் உள்ள  அனைத்து சட்டவிரோத கட்டங்களையும் உடன் அகற்றுதல்.
தலதா மாளிகையைப் பாதுகாக்கும்வகையில் தொடர்ந்தும் தலதா வீதியை மூடிவைத்தல் முதலான முடிவுகள் எடுக்கப் பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--