2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

எதிர்க்கட்சிகளுடன் பேசுவதற்கு ரணில் விக்கிரமசிங்க திட்டம்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 13 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகளை சந்தித்து பேச்சுவார்த்தையொன்றை நடத்தவுள்ளார்.

அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை மாற்றி நிறைவேற்று அதிகாரமுடைய பிரதமர் முறைமையை உருவாக்குதல் ஆகியன தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெறவிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கூறினார்.

பொதுவான அரசியலமைப்பு சீர்திருத்தத்தை உருவாக்குதல் தொடர்பில் கலந்துரையாடப்படவிருப்பதாகவும் மேலும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .