2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

புளொட் அமைப்பின் வருடாந்த வீரமக்கள் தினம்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 13 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளொட்) வருடாந்தம் அனுஷ்டிக்கும் வீரமக்கள் தின நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகின.

வவுனியா கோவில்குளம் அமரர் உமா மகேஸ்வரன் சமாதிக்கு சுடர் ஏற்றப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது. நகரசபை எதிர்க்கட்சித் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர் சு.குமாரசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

212ஆவது வீரமக்கள் தின இறுதிநாள்  அஞ்சலி வைபவம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை சமாதி முன்றலில் நடைபெறும். விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த தமிழ்த் தலைவர்கள், அனைத்துப் போராளிகள், பொதுமக்களை நினைவுகூர்ந்து வீரமக்கள் தினத்தை புளொட் அமைப்பு வருடாந்தம் அனுஷ்டித்து வருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .