2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்றம்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 13 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் எதிர்வரும் 15ஆம் திகதி வியாழக்கிழமை மீள்குடியேற்றம் செய்வதற்காக அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

மீளவும் சொந்த இடங்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்து பதிவு செய்யப்பட்டு தற்போது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் வேறு மாவட்டங்களில் வசிப்பவர்களும் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு பயணத்திற்குரிய ஆயத்தங்களுடன் வவுனியா நகரசபை மைதானத்திற்கு வருகை தருமாறு முல்லைத்தீவு மாவட்ட உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.சிறிரங்கன் தெரிவித்தார்.

முத்தையன்கட்டு, கனகரட்ணபுரம், பேராறு, பண்டாரவன்னி, கற்சிலைமடு முத்திவிநாயகபுரம், ஒட்டுசுட்டான் நகரம், காதலியார்மகிழங்குளம், தட்டையர்மலை, கணேசபுரம், வித்தியாபுரம், கருவேலன்கண்டல், புளியங்குளம், கூழாமுறிப்பு, ஒதியமலை, பெரியகுளம், தண்டுவான், பழம்பாசி, பெரிய இத்திமடு ஆகிய இடங்களுக்கே இவர்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--