2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

கணேஷ் வழியில் செல்வேன் -புதிய யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 13 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். அரசாங்க அதிபராக இதுவரை காலமும் பதவி வகித்திருந்த கே.கணேஷின் வழியிலேயே தனது  பணிகளை முன்னெடுக்கவிருப்பதாக புதிய யாழ். அரசாங்க அதிபராக இன்று பதவியேற்றுள்ள இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.இமெல்டா சுகுமார் பதவியேற்ற பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, இவ்வாறு கூறினார்.

கே.கணேஷ் தனது குரு என்றும் அவர் குறிப்பிட்டார்.

கே.கணேஷ் ஓய்வு பெறுவதையடுத்து, இமெல்டா சுகுமார் யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக நாகலிங்கம் வேதநாயகம் இன்று பதவியேற்றுள்ளார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--