2025 ஜூலை 12, சனிக்கிழமை

மூத்த பத்திரிகையாளர் ஹஸன் கௌரவிக்கப்பட்டார்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 13 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும் முதுபெரும் எழுத்தாளரும் கல்விமானுமாகிய ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி கலாபூசணம் எஸ்.எம்.ஏ.ஹஸன் ஒராபி பாசா பற்றிய நூலை எழுதியதற்காக பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

எகிப்திய நாட்டின் விடுதலை வீரர் அஹ்மத் ஒராபி பாசா இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு 127 வருடம் நிறைவடைவதை முன்னிட்டு கண்டியில் இயங்கும் எகிப்திய தூதுவராலயத்திற்குச் சொந்தமான ஒராபி பாசா கலாசார மத்திய நிலையம் ஒழுங்கு செய்த வைபவத்தில் ஒராபி பாசா பற்றிய நூலொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

கலாபூசணம் எஸ்.எம்.ஏ ஹஸன் எழுதிய ஒராபி பாசாவும் அவர் சஹாக்களும் என்ற நூல் வெளியீட்டின்போது இடம்பெற்ற வைபவத்திற்கு எகிப்திய தூதுவராலய பிரதி தலைமை அதிகாரி டாக்டர் முஹம்மத் முஹ்ஸின் பிரதம அதிதயாகக்  கலந்து கொண்டார்.

ஒராபி பாசா கலாசார நிலையத்தில் பல்வேறு தொழில் பயிற்சிகளைப் பெற்றுவரும் மூவின யுவதிகளினதும் ஆக்கங்களின் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .