2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

யாழ். கோட்டை புனர்நிர்மாணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பணிப்பு

Suganthini Ratnam   / 2010 ஜூலை 14 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் கோட்டையின் புனர்நிர்மாணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்த தேசிய மரபுரிமைகள் மற்றும் கலாசார அலவல்கள் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தொல்பொருளியல் திணைக்களத்தைப் பணித்துள்ளார்.

இதன் புனர்நிர்மாணப் பணிக்காக 33 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று யாழ். குடாநாட்டுக்கு விஜயம் செய்திருந்த அவர், யாழ். பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அமைச்சின் செயலாளர்கள், தொல்பொருள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், மதகுருமார்கள் படைத்தரப்பினர் உட்பட பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--