2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

எப்பாவலை நால்வர் கொலை: வீட்டிலிருந்து தலைமறைவான இளைஞரை கைது செய்ய உத்தரவு

Super User   / 2010 ஜூலை 14 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுபுன் டயஸ், அதுல பண்டார)

அநுராதபுரம் மாவட்டத்தின் எப்பாவலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து அக்குடும்பத்தினரின் வீட்டிலிருந்து தலைமறைவான இளைஞர் ஒருவரை உடன் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விசாரணைகளை மேற்கொண்ட தப்புத்தேகம மேலதிக நீதவான் கித்சிறி ஜயசேகர இந்த உத்தரவை பிறப்பித்தார்.

கொலை செய்யப்பட்ட குடும்பத் தலைவியின் சகோதரியின் மகனே அவ்வீட்டிலிருந்து தலைமறைவானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எப்பாவலையிலுள்ள கடையொன்றில் முகாமையாளர் கே. ஏ. தயாரட்ண (48), அவரின் மனைவி மாலினி (42), மற்றும் இத்தம்பதியின்  பிள்ளைகளான அஜனி உதேஷிகா (17), திஷான் தயாரட்ன (13) ஆகியோர் அவர்களின் வீட்டிலிருந்து இன்று சடலங்களாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வீட்டின் வெவ்வேறு பகுதிகளில் இவர்களின் சடலங்கள் காணப்பட்டதாகவும் அவர்கள் கத்தியால் குத்தப்பட்டும் வெட்டியும் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--