2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

புத்தளம் முஸ்லிம்களின் வரலாறும் வாழ்வியலும் நூல் சனிக்கிழமை வெளியிடப்படுகிறது

Super User   / 2010 ஜூலை 14 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் எழுதிய புத்தளம் முஸ்லிம்களின் வரலாறும் வாழ்வியலும் எனும் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை  (17) புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் ஏ.எச்.எம். அஸ்வர் ஹாஜியார் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நூல் வெளியீட்டு விழாவில் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்ஸுப் பிரதம அதிதியாகவும் ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி சுக்ரி விஷேட பேச்சாளராகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

நூல் விமர்சனத்தை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் பிரதி பணிப்பாளர் அகார் முஹம்மத் மேற்கொள்ளவுள்ளார். இ வெளியீட்டு விழா புத்தளம் காஸிமிய்யா அரபு கல்லூரியின் அதிபர் மெளவி அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் தலைமையில் இடம்பெறவுள்ளது.

கலாநிதி அனஸ் பேராதனை பல்கலைக்கழகத்தின் மெய்யியல் மற்றும் உளவியல் துறையின் தலைவராவார். இவர் இதற்கு முன்னர் இலங்கை முஸ்லிம் வரலாறு, நாட்டாரியல் மற்றும் மெய்யியல் துறை சார்ந்த பல புத்தகங்களை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. (R.A)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .