2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

கண்டியில் துரியான் பருவம் ஆரம்பம்:விலையில் வீழ்ச்சி

Suganthini Ratnam   / 2010 ஜூலை 15 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டிப் பகுதியில் துரியான் பருவம் ஆரம்பித்துள்ளது. இது துரியான் பிரியர்களுக்கு சந்தோஷமான செய்தியாகும். ஆனால் உற்பத்தியாளர்களுக்கு அவ்வளவு விலை மலிவாக உள்ளது.

கண்டியில் துரியான் பருவம் ஆரம்பித்ததும் வழமையாக அது அதிக விலையில் விற்கப்படுவது வழக்கம். இம்முறை விலையேற்றத்தை அவதானிக்க முடியவில்லை.

வழமையாக ஒரு துரியான் பழம்  250 முதல் 400 ரூபா வரை விற்பனையாகும். ஆனால் இம்முறை 40 முதல் 150 ரூபா வரையில் விற்பனையாவதை அவதானிக்க முடிகிறது.

கண்டி மாவட்டத்திலுள்ள துரியான் பழத்தையே மக்கள் விரும்பி உண்பர். அது அற்புதமான சுவை கொண்டது என்பர். அதிக பழங்கள் சந்தைக்கு வரும்போது இன்னும் விலை சரிய இடமுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--