2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் அடுத்த அமைச்சரவை கூட்டம் நடத்த ஏற்பாடு

Menaka Mookandi   / 2010 ஜூலை 16 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதேசவாரியான முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தை கிளிநொச்சியில் நடத்திய அரசாங்கம் அடுத்த கூட்டத்தினை இரத்தினபுரி மாவட்டத்துக்கு உட்பட்ட எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

கொழும்பில் இருந்தவாறே நிர்வாக முடிவுகளை எடுக்கும் நடவடிக்கையிலிருந்து விலகி அதனை கிராமிய ரீதியில் கொண்டு செல்லும் வகையிலேயே இந்த பிரதேசவாரியான அமைச்சரவைக் கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிராமிய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான தீர்மானங்கள் அமைச்சரவையினூடாகவே நிறைவேற்றப்படுகின்றன. இந்நிலையில், அதற்கான தீர்மானங்கள் அந்தந்த பிரதேசங்களிலிருந்தவாறே எடுக்கப்பட வேண்டும் என்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யோசனையாகும்.

அமைச்சரவை அந்தஸ்து பெற்ற அமைச்சர்கள் அனைவரும் ஜனாதிபதி தலைமையிலான கூட்டத்தில் பங்குபற்றுவதால், அவர்கள் ஒவ்வொருவரினதும்  செயற்பாடுகள் குறித்து நேரடியாக அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் இந்த பிரதேசவாரியான அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெறுகின்றது.

அத்துடன், பிரதேச மக்களின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் நேரடி கவனத்துக்கு கொண்டுவரப்படுவதால் அவற்றுக்கான தீர்வுகள் இந்த கூட்டத்தின் போது உரிய அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இதனால், இந்த பிரதேசவாரியான அமைச்சரவைக் கூட்டம் மிகவும் முக்கியத்துவமாகிறது என்று அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--