2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கூடி ஆராயவுள்ளது

A.P.Mathan   / 2010 ஜூலை 17 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கூடி ஆராயவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அரசாங்கம் ஆகியவற்றின் நிலைப்பாடு குறித்து நாளைய தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கூடி ஆராயவுள்ளது.
 
அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடாத்த, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உத்தேசித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
பொதுத் தேர்தல்களின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்குழு முதல் தடவையாக நாளைய தினம் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் கூடவுள்ளது.
 
கட்சியின் அதி உயர் பீடம், அரசியல் சபை உள்ளிட்ட 500இற்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .