2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

'லங்கா' பத்திரிகை அலுவலகத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை

Super User   / 2010 ஜூலை 17 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்று மாலை 'லங்கா' பத்திரிகை ஆசிரியரிடம் விசாரணை நடத்தியதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. 'இரிதா லங்கா' பத்திரிகையில் வெளிவந்த செய்தியறிக்கையொன்று தொடர்பாகவே இவ்விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பத்திரிகையின் தலைமை அலுவலகத்திற்கு வந்த குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், மேற்படி ஆக்கம் தொடர்பாக வாக்குமூலமொன்றை பெற்றதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

அதேவேளை, அவ்வலுவலகத்தில் பணியாற்றும் நபர்கள் குறித்த விபரங்களையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பெற்றுச்சென்றதாகவும் அப்பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--