2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள்

A.P.Mathan   / 2010 ஜூலை 17 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு கொக்குவில் கிழக்கு கிருபாகரசுவாமி கோவிலில் இடம் பெற்ற விசேட பூஜைகளைத் தொடர்ந்து ஆரம்பமாகியது

கல்லூரி அதிபர் அ.அகலதாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நல்லூர் பிரதேச செயலாளர் பா.செந்தில்நந்தனன், கல்லூரியின் முன்னாள் ஆசிரியை சுகிர்தலட்சும் சுப்பிரமணியம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் உட்பட விருந்தினர்கள் கல்லூரி மாணவர்களின் பாண்ட் வாத்திய இசையுடன் ஊர்வலமாக பஞ்சலிங்கம் மண்டபத்தில் அமைந்துள்ள செல்லையா கலையரங்கிற்கு அழைத்து வரப்பட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து நல்லைக்குரு முதல்வர், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் உட்பட மற்றும் விருந்தினர்களும் மங்கல விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்கள்.

இந்நிகழ்வில் கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டி வெளியிடப்பட்ட நூலை, கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுவைக்க, சமூகப் புரவலர் மாணிக்கம் சுப்பிரமணியம் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

கனடாவாழ் பழைய மாணவர்களினால் வழங்கப்பட்ட கேடயத்தை கல்லூரி அதிபரிடம் கனடாவில் இருந்து வந்துள்ள முன்னாள் ஆசிரியையும் பழைய மாணவியுமான சுப்பிரமணியம் சுகிர்தலட்சுமி வழங்கிக் கௌரவித்தார்.

கொழும்புக்கிளையின் பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் வாழ்த்து மடலை முன்னாள் பிரதி அதிபரும் பழைய மாணவனுமான ஜெகநாதன், ஸ்ரீராகுலன் ஆகியோர் அதிபரிடம் வழங்கினார்கள்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .