Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஜூலை 17 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உபதலைவராக செயற்பட்ட வே.இராதாகிருஷ்ணன் இ.தொ.கா.விலிருந்து பிரிந்து மலையக மக்கள் முன்னணிக்குச் செல்வதாக வெளியாகிய தகவலொன்றை தொடர்ந்து அவருக்கும் இ.தொ.கா. வின் உயர்மட்ட உறுப்பினர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தொடர்ந்து கருத்துத்தெரிவிக்கையில் :
"அண்மையில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்ட மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து சுமார் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை வழங்கியுள்ளனர். அவ்வாறு வாக்களித்த மக்களுக்கு உரிய வகையில் சேவையாற்றுவது எனது கடப்பாடாகும்.
அதேவேளை, வாக்களித்த மக்கள் என்னிடம் எந்தவிதமான தயக்கமுமின்றி தொடர்பு கொண்டு எனது சேவையினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நான் தொடர்ந்து மக்கள் செல்வாக்குடன் செயற்பட்டு வருகின்றேன். இவ்வாறானதொரு நிலையில் நான் இ.தொ.கா.விலிருந்து விலகி விட்டாதாக சிலர் புரளி கிளப்பி விட்டுள்ளனர். நான் தொடர்ந்து இ.தொ.கா.வில் தான் அங்கம் வகிக்கின்றேன். இ.தொ.கா.வின் நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்து கொண்டு மக்கள் பணியாற்றுவதே எனது நோக்கமாகும். இந்த நிலையில் இ.தொ.கா.வின் பணிமனைகளுக்கு நான் செல்லக்கூடாதென்றும் என்னோடு இதன் உறுப்பினர்கள் தொடர்பு கொள்ளக்கூடாதென்று இ.தொ.கா.வின் தலைமைப்பீடம் அறிவுறுத்தியுள்ளதாக ஊடகங்கள் ஊடாக அறிந்து கொண்டேன்.
நான் இ.தொ.கா.வின் ஊடாக அரசியலுக்குப் பிரவேசித்தவன். மக்கள் செல்வாக்குடன் பல்வேறு பதவிகளை வகித்து மக்களுக்குப் பணியாற்றியுள்ளேன். இதனைத் தொடர்ந்து முன்னெடுத்து மக்களின் மனங்களில் சிறந்த சேவகனாக தொடர்ந்து பெயரெடுப்பேன்" என்றார்
2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago