2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

யாழ். வாகன விபத்தில் பத்மினி சிதம்பரநாதன் உட்பட நால்வர் காயம்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 18 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பபாணம் கொடிகாமம் இராமாவில் பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திருமதி பத்மினி சிதம்பரநாதன் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.

இராமாவில் ஆலயப் பகுதியில் ஏ  -9 வீதியில் நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் யாழ்ப்பாணத்தில் கொழும்புக்குச் சென்று கொண்டிருந்த லொறியுடன் அங்கிருந்து வந்துகொண்டிருந்த வான்கள் இரண்டு ஒன்றன்பின் ஒன்றாக மோதின.

இதில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திருமதி பத்மினி சிதம்பரநாதன் (வயது- 53) அவரது கணவரான கந்தசாமி சிதம்பரநாதன் (வயது 56) உரும்பிராயைச் சேர்ந்த செல்லையா தங்கராஜா (வயது 76) அராலி கிழக்கைச் சேர்ந்த கந்தசாமி கணநாதன் (வயது 47) ஆகிய நால்வருமே காயமடைந்தவர்கள் ஆவர்.

இவர்கள் உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .