2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

கப்பல்களிலிருந்து எரிபொருள் இறக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த திட்டம்

Menaka Mookandi   / 2010 ஜூலை 18 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கப்பல்கள் மூலம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்கள், கடற்படையினரின் பாதுகாப்புடன் 24 மணி நேரமும்  கரையேற்ற பெற்றோலிய  வள  அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பாதுகாப்பு நிலைமை காரணமாக இதுவரை காலமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் மாத்திரமே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனால், ஒரு கப்பலுக்கு ஒரு கோடியே 20 இலட்சம் ரூபா என்ற அடிப்படையில் தாமதக் கட்டணம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலைமை இனிமேல் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எரிபொருட்கள் இறக்கப்படும் நடவடிக்கையை நேரில் பார்வையிடுவதற்காக பெற்றோலிய வள அமைச்சர் சுசில் பிரேமஜயந்தஇ பிரதி அமைச்சர் சரண குணவர்தன உள்ளிட்ட குழுவினர் இன்று கொழும்பு துறைமுகத்துக்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.  (படப்பிடிப்பு :- நிஷால் பதுகே)
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .