Super User / 2010 ஜூலை 18 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓளடதச் சட்டத்தை முறையாகப் பின்பற்றாத மருந்து விற்பனை நிலையத்தினர் சிறைத்தண்டனையை அல்லது அபராதத்தை எதிர்கொள்ள நேரிடலாம் என தேசிய அபாயகர ஒளடதக் கட்டுப்பாட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் கே. கமகே தெரிவித்துள்ளார்.
"மருத்துவர்களின் மருந்துச்சிட்டையின்றி பொதுமக்களுக்கு மருந்துகளை விற்பனை செய்யும் மருந்துவிற்பனை நிலையத்தினர் 5,000 முதல் 50,000 ரூபாவரை அபாரதம் செலுத்த நேரிடலாம். அல்லது 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அல்லது அபராதம் சிறைத்தண்டனை ஆகிய இரண்டையும் எதிர்கொள்ள நேரிடலாம்" என அவர் மேலும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மருந்துவிற்பனையாளர்களுக்கும் பொலிஸாருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் அபாயகர ஒளடதக் கட்டுப்பாட்டுச்சபை மேற்கொண்டுள்ளது.
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025