2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

தமிழ்ச் செம்மொழி விழா சுவாமி விபுலானந்தரின் சிரார்த்ததினமான இன்று காரைதீவில்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 19 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்ச் செம்மொழி விழா மிகவும் பிரமாண்டமான முறையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இன்று நடைபெறுகிறது.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தலைமை தாங்குகின்ற இந்நிகழ்வினை, கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம், கல்முனை கல்வி
வலயம், காரைதீவு பிரதேச மக்கள் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

சுவாமி விபுலானந்தரின்  சிரார்த்த தினமான இன்று அவரின் பிறந்த மண்ணான அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவு கிராமத்தில் அமைந்திருக்கும் விபுலானந்தா மத்திய கல்லூரியில் இந்நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

இந்நிகழ்வை மேலும் மெருகூட்டும் வகையில் இதன் ஒரு கட்டமான அகில இலங்கை தமிழ்த்தினப் போட்டிகளின் கிழக்கு மாகாணப் போட்டிகள் கல்முனையில் நடைபெற்றன.

இன்று நடைபெறுகின்ற தமிழ்ச் செம்மொழி விழாவில் தமிழ்த்தினப் போட்டிகளில்
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படுவதுடன், பேராளர்களும்
கௌரவிக்கப்படவுள்ளனர்.

இந்த விழாவுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்து கொள்ளும் அதேவேளை,  ஏனைய அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமல வீர திஸாநாயக்க, இந்தியா புதுவை பல்கலைக்கழக பேராசிரியர் ஏ.அறிவுமதி,  கலாநிதி இ.வெங்கடேஸ்வரன்
( சிங்கப்பூர்) கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கே.பிறேம்குமார்,  தென்கிழக்கு
பல்கலைக்கழக உபவேந்தர் எஸ்.எம்.இஸ்மயில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் வ.போ.பாலசிங்கம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்
எச்.கே.யு.கே.வீரவர்த்தன, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதி செயலாளர் எஸ்.தண்டாயுதபாணி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இன்று காலை 8 மணிக்கு கிழக்கு மகாண கல்வி வலயங்களினால் ஒழுங்குசெய்யப்பட்ட 12 ஊர்திகளும், காரைதீவு பிரதேச சபையால் ஒழுங்குசெய்யப்பட்ட ஒரு ஊர்தியும் அம்பாறை மாவட்டத்திலுள்ள பெரிய நீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்திலிருந்து ஊர்வலமாக நிகழ்வு இடம்பெறவுள்ள காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரிக்கு செல்லவுள்ளதாக இந்த விழாக் குழுவின் செயலாளரான கல்முனை கல்வி வலய தமிழ்மொழி பாட ஆசிரிய ஆலோசகர் கே.வரதராஜன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--