2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

வேப்பங்குளம் அரிசி ஆலையில் நபரொருவர் உயிரிழப்பு:பாம்பு தீண்டி மரணமானதாக மரண விசாரணை அறிக்கை

Suganthini Ratnam   / 2010 ஜூலை 19 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா - மன்னார் வீதி வேப்பங்குளம் அரிசி ஆலைக்குள் உயிரிழந்து கிடந்தவர் பாம்பு தீண்டி விஷம் ஏற்பட்டு மரணமாகியிருப்பதாக மரண விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. 

வேப்பங்குளம் பட்டகாட்டைச் சேர்ந்த நவரட்னராசா- நவநீதன் (வயது 30) என்பவர் வயல் வேலைக்குச் சென்றுவிட்டு களைப்பினால்  ஆலையோரத்திலுள்ள குடிசையில் படுத்து தூக்கமாகியுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 7  மணியாகியும் தூக்கத்திலிருந்து இவர் எழுந்திருக்கவில்லை. இந்நிலையில், இவரது நண்பர்கள் சென்று பார்த்தபோது அவர் மரணமானமை தெரியவந்தது.

பொலிஸாரின் உதவியுடன் சடலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு  வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

இவர் பாம்பு தீண்டி விஷம் ஏறியதினால் மரணமடைந்ததாக  வைத்திய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

பாம்பு தீண்டி ஏற்பட்ட மரணம் என மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் தீர்ப்பு வழங்கியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .