Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஜூலை 05 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை வாபஸ் பெறப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தான் மேற்கொண்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் தொடர்பான தனது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லையெனவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை ஆகஸ்ட் 15 ஆம் திகதி முதல் வாபஸ் பெறப்படுவதாகவும் எனினும் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே இருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளமை குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். நாம் அதில் தெளிவாக இருக்கிறோம். ஜி.எஸ்.பி. பிளஸ் இழப்பு சுமார் 85 மில்லியன் யூரோ. அதேவேளை எமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நாம் ஏனைய சந்தைவாய்ப்புகள் குறித்தும் ஆராய்கிறோம்'' என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல டெய்லி மிரர் இணையத் தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.
6 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago
agoyajimmy Tuesday, 06 July 2010 06:52 PM
ஐயோ இது என்ன கொடுமை.
கெஹலிய ரம்புக்வலவுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை, எங்களுக்கு தான் பிரச்சினை இருக்கு, ஐரோப்பியன் யூனியன் என்னசொல்றாங்க, நாட்டுக்கும் அங்க இருக்கிற மக்களுக்கும் நல்லதா செய்ய சொல்றாங்க, நம்ம அரசாங்கம் மக்கள் மேல பொறுப்பு இல்லாமல் நடந்துகறாங்க. மந்திரிகளால் பேசப்படும் பேச்சுக்களைப் பார்க்கும்போது ரொம்ப கவலையா இருக்கு. அவங்களுக்கு என்ன? வீடு, வாகனம் எல்லா வசதியும் இருக்கு. மக்கள் தான் பாவம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago