2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

நைரோபி செல்ல பொன்சேகாவுக்கு மறுப்பு; பொதுநலவாயத்திடம் ஆட்சேபம் - ஜ.தே.மு.

Super User   / 2010 ஜூலை 05 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கென்யாவில் நடைபெறவுள்ள, பொதுநலவாய நாடாளுமன்றச் சங்க மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அனுமதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு மறுக்கப்படும் பட்சத்தில், அது குறித்து பொதுநலவாய அமைப்பிடம் ஆட்சேபம் தெரிவிக்கப்படும் என ஜனநாயக தேசிய முன்னணி தெரிவித்தது.  

கென்யத் தலைநகர் நைரோபியில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இம்மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா, அந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அனுமதி மறுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனநாயக தேசிய முன்னணியின் செயலாளர் டிரான் அலஸ், “நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள்ள அனைத்து உரிமைகளும் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கும் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

எனவே, பொதுநலவாய நாடாளுமன்ற சங்க மாநாட்டில் கலந்துகொள்வதற்கு சரத் பொன்சேகாவுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.  இதற்கான அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் பொதுநலவாய அமைப்பிடம் ஆட்சேபம் தெரிவிக்கப்படும் என்று டிரான் அலஸ் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--