2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

இலங்கை அகதிகளின் புகலிடக் கோரிக்கை விண்ணப்பப் பரிசீலணை மீள ஆரம்பம்: அவுஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு

A.P.Mathan   / 2010 ஜூலை 06 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலிருந்து வரும் அகதிகளின் புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களை பரிசீலணை இடைநிறுத்தும் தீர்மானம் உடனடியாக ரத்துச்செய்யப்படுவதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் இன்று அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட்டும் அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவரும் அகதிகள் தொடர்பான தமது கொள்கைகளை இன்று அறிவித்தனர்.

இதன்படி இலங்கையிலிருந்து வரும் அகதிகளின் புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடவடிக்கை உடனடியாக ஆரம்பமாகும் எனவும் ஆனால் ஆப்கானிஸ்தான் அகதிகளின் விண்ணப்ப பரிசீலணை மீதான இடைநிறுத்தம் தொடரும் எனவும் பிரதமர் ஜூலியா கில்லார்ட் அறிவித்துள்ளார்.

அகதிகளின் புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கான நிலையமொன்றை கிழக்குத் திமோரில் அமைப்பது குறித்து கிழக்குத் திமோர் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அவுஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் டொனி அபோட் வெளிநாடுகளில் வைத்து அகதிகளின் புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கான நிலையங்களை அதிகரிக்கும் கொள்கையை முன்வைத்துள்ளார். இதன்மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வரும் அகதிகளின் படகுகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--