2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

நிபுணர் குழுவுக்கு எதிராக மேல் மாகாண சபையில் தீர்மானம்

Super User   / 2010 ஜூலை 06 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிபுணர் குழுவொன்றை நியமித்ததைக் கண்டித்து மேல் மாகாண சபை இன்று ஏகமனதாக தீர்மானமொன்றை நிறைவேற்றியது.

இத்தீர்மானத்தை  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  மாகாண உறுப்பினர் ரத்தினசிறி வராகொட முன்மொழிந்ததாகவும் ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி. உட்பட அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த உறுப்பினர்களால் அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் ஐ.ம.சு.மு.  மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில டெய்லிமிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--