Super User / 2010 ஜூலை 06 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜமீலா நஜ்முதீன்)
கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அதன் ஊழியர்கள் நாளை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஐ.நா. வட்டாரங்கள் டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தன. இன்று ஐ.நா. அலுவலகத்திற்கு வெளியே காணப்பட்ட பதற்றநிலையைத் தொடர்ந்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சர் விமல் வீரவன்ஸ துலைமையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டு ஐ.நா. ஊழியர்கள் அலுவலகத்திலிருந்து வெளியேறுவதை தடுத்தனர். இதையடுத்து மேற்படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்தன.
எவ்வாறெனினும் எவ்வளவு காலத்திற்கு ஐ.நா. ஊழியர்கள் வீடுகளிலிருந்து பணியாற்றுவர் என்பது தெரியவில்லை.
நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. அலுவலக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டபோது கொழும்பின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் இவ்விவகாரம் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேசப்படும் எனவும் தெரிவித்தனர்.
இதேவேளை ஐ.நா. இணைப் பேச்சாளர் பர்ஹான் ஹக் சற்றுமுன் நியூயோர்க்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் விமல் வீரவன்ஸவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி ஆர்ப்பாட்டம் குறித்து ஐ.நா. தனது கடுமையான ஆட்சேபனையை இலங்கை அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago