2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

நிபுணர் குழு மாதஇறுதியில் கூடுகிறது...

Super User   / 2010 ஜூலை 06 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜமீலா நஜ்முதீன்)

 

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு இலங்கை விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக அவரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு திட்டமிட்டபடி இம்மாத இறுதியில் கூடவுள்ளதாக அந்நிபுணர் குழுவின் தலைவர் மர்சுகி தருஸ்மன்  டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

நிபுணர் குழு தனது பணிகளை ஆரம்பிப்பதற்காக இம்மாதம் மூன்றாவது வாரத்தில் கூடவுள்ளதாகவும் தெரிவித்துள்ள மர்சுகி தருஸ்மன் இதற்கான சரியான திகதிகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் கூறினார்.  

மேற்படி நிபுணர் குழுவை மூன்று முட்டாள்கள் என அமைச்சர் விமல் வீரவன்ஸ விமர்சித்துள்ளமை குறித்து தருஸ்மனிடம் கருத்து கேட்டபோது தற்போது இது கறித்து கருத்து எதனையும் தான் கூறவிரும்பவில்லை எனவும் விடயங்கள் எவ்வாறு நகருகின்ற எனப் பார்ப்போம் எனவும் அவர் பதிலளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--