2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

இராசதானி தொல்பொருள்கள் காயங்கேணியில் கண்டெடுப்பு...

A.P.Mathan   / 2010 ஜூலை 07 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மட்டக்களப்பு (ஜவ்பர்கான்)
வாகரை பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட காயங்கேணி கிராமத்திலிருந்து இராசதானி தொல்பொருள் கட்டிடங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இப்புராதன தொல்பொருட்கட்டிடங்களை வாகரை பிரதேச செயலாளர் திருமதி எஸ்.இராகுலநாயகி தலைமையிலான உயர் மட்ட குழுவினர் சென்று பார்வையிட்டனர். இவர்களுடன் வாகரை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.கப்புகொடுவவும் சென்றிருந்தார்.

தொல்பொருள் ஆய்வாளர்கள் கொழும்பிலிருந்து வரவுள்ளதாக வாகரை பிரதேசசெயலகம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--