2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பான் கீ மூன் கூறிய பொய்

Administrator   / 2010 ஜூலை 09 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

உண்மையில் மேற்படி அலுவலகத்தை மூடுவதற்கான நடவடிக்கை பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தது எனவும் அமைச்சர் விமல் வீரவன்ஸவின் போராட்டத்துடன் அதற்குத் தொடர்பில்லை எனவும் கொழும்பிலுள்ள ஐ.நா. அதிகாரியொருவர் டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஐ.நா. அபிவிருத்தித்திட்ட பிராந்திய அலுவலகத்தை மூடுவதற்கும் அமைச்சர் விமல் வீரவன்ஸவின் போராட்டத்திற்கும் இடையில் தொடர்பு எதுவுமில்லை. இந்த அலுவலகம் முன்னர் காத்மண்டிலிருந்து இயங்கியது. 2006 அல்லது 2007 ஆம் ஆண்டு அங்கிருந்த பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இவ்வலுவலகம் கொழும்புக்கு இடமாற்றப்பட்டது. 

ஆனால், கடந்த வருடம் நிர்வாகம் மற்றும் பொருளாதார ரீதியான சில காரணங்களால், பிராந்திய அலுவலகத்தின் பரிமாணத்தைக் குறைத்து பிரதான செயற்பாடுகளை மீண்டும் பாங்கொக் அலுவலகத்திற்கு மாற்றத் தீர்மானிக்கப்பட்டது. எனவே இது ஒரு புதிய தீர்மானமல்ல என அந்த அதிகாரி கூறினார்.

நியூயோர்க்கில் பான் கீ மூன் விடுத்த அறிக்கையில் அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்புப் போராட்டங்களால் கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகங்களின் வழக்கமான செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதை இலங்கை அதிகாரிகள் தடுக்கத் தவறியதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐ.நா. பொதுச்செயலாளர் கருதுகிறார்.

இந்நிலையில் ஐ.நா. வதிவிடப்பிரதிநிதி நீல் புஹ்னேவை கலந்துரையாடல்களுக்காக நியூயோர்க்கிற்கு திருப்பியழைக்க அவர் தீர்மானித்துள்ளார். அத்துடன் கொழும்பிலுள்ள ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் பிராந்திய அலுவலகத்தை மூடுவதற்கும் திட்டமிட்டுள்ளார் என எனத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .