2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

மாணவனின் மரணம் தொடர்பாக ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு

Super User   / 2010 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் இன்று அறிவித்தது.

இந்த ஒரு நபர் ஆணைக்குழுவின் அங்கத்தவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜகத் பாலபட்டிபெந்தே நியமிக்கப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மரணத்திற்கு காரணமானவர்கள் என சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து இந்த ஆணைக்குழு விசாரணை நடத்தவுள்ளது.

இம்மாணவனின் மரணத்திற்கு பொலிஸாரின் தாக்குதலே காரணம் என றுகுணு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சுமத்தி வருகிறது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--