2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் சார்ஜன்ட் கொலை வழக்கு; பிரதான சந்தேகநபர் விளக்கமறியலில்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 09 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.பாரூக் தாஜுதீன்)

பன்னல பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் மெதகம லேகம்லாகே சுகத் பிரியதர்சன என்பவரை கொதட்டுவ அணைக்கட்டில் வைத்து ஆகஸ்ட் 01ஆம் திகதி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதம சந்தேக நபர் வெல்லம்பிட்டிய பொலிஸாரினால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது அவரை ஆகஸ்ட் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் பணித்துள்ளார்.

தற்போது விளக்க மறியலில் உள்ள சந்தேக நபர்கள் இருவருடன் சேர்த்து பிரதம சந்தேக நபரான கொலன்னாவையை சேர்ந்த பெரலதேவ ஹேவா கே தனுஷ்கஇ என்பவர் பன்னல பொலிஸ் சார்ஜன்டான மெடகம லேக்கம்லாகே சுகத் பிரயர்ஷன என்பவரை ஆகஸ்ட் 01ஆம் திகதி கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொலை செய்யப்படுமுன் கொலை செய்யப்பட்டவர் மது அருந்திய நிலையில் கொலையாளிகளுடன் ஒரு விடுதியில்  தங்கியிருந்ததாக தெரியவந்தது.

பொலிஸ் விசாரணை முடியவில்லை என்றும் சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்கும்படியும் பொலிஸ் சார்ஜன்ட் காமினி ஹெட்டியாராச்சி நீதி மன்றில் கோரினார். சந்தேக நபரை ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் தெரிவித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .