2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேற முன்னாள் மேயர் மறுப்பு

Super User   / 2010 ஓகஸ்ட் 10 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(இந்திக ஸ்ரீ அரவிந்த)

(இந்திக ஸ்ரீ அரவிந்த)கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் உவைஸ் மொஹமட் இம்தியாஸ் தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேற மறுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


மேயருக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேறுவதற்கான காலக்கெடு, கடந்த மாதத்துடன் முடிவடைந்த போதிலும் மொஹமட் இம்தியாஸ் இன்னும் வெளியேறாமல் இருப்பதாக  மாநகர சபை விசேட ஆணையாளர் கொழும்பு மாநகர சபை ஒமர் காமில் டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.  தெரிவித்துள்ளார்.


உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலிருந்து வெளியேறுவதற்காக முன்னாள் மேயர் இம்தியாஸ் 3 மாதகால அவகாசம்  கோரியிருந்ததார். இதற்கான அவகாசம் கடந்த 31 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
 

எனினும் மேற்படி உத்தியோகபூர்வ இல்லத்தில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கு தான் ஜனாதிபதியிடமிருந்து விசேட அனுமதி பெற்றிருப்பதாக உவைஸ் மொஹமட் இம்தியாஸ் டெய்லிமிரர் இணையத் தளத்திற்குத் தெரிவித்தார். (DM)


  Comments - 0

  • xlntgson Tuesday, 10 August 2010 09:01 PM

    உத்தியோகபூர்வமாக அடுத்த மாநகர மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இருந்துவிட்டுப் போகட்டுமே, பாவம்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--