2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணைக்கு வலியுறுத்துமாறு அமெ. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 11 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கு வலியுறுத்துமாறு ஒபமா நிர்வாகத்திடம், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தால் விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் குழு தேவையான நம்பகத்தன்மையை குறைவாகக் கொண்டிருப்பதாக அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்தக் குழு குற்றச்செயல்கள் தொடர்பிலான விசாரணைகளை தாமதப்படுத்தி வருவதாகவும்,  அரசாங்கத்தின் தலையீடு காரணமாக இந்த ஆணைக்குழுவின் பல உறுப்பினர்கள் இராஜினாமாச் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 57 பேர் கையெழுத்திட்டு மேற்படி கடிதத்தை ஹிலாரி கிளின்டனிடம் சமர்ப்பித்துள்ளனர்.

"யுத்தத்தின்போது இரு தரப்பினரும் யுத்தக் குற்றச்செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தமைக்கு தகுதியான சாட்சியங்கள் உள்ளன" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு தசாப்தகாலமாக இடம்பெற்ற யுத்தத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பை கடந்த வருடம் மே மாதம் படையினர் தோற்கடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--