2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

மாநகரசபை ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்தது

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் மேற்கொண்டுவந்த பணி பகிஸ்கரிப்பு போராட்டம் இன்று நண்பகல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. நேற்று செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தீர்வு எட்டப்படாத நிலையில் இன்று புதன்கிழமையும் தொடர்ந்தது.

இதனால் மட்டக்களப்பு நகரில் சந்தையுட்பட வீதித் துப்புரவு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதுடன் மாநகர அலுவலக கடமையும் முற்றாக செயலிழந்து காணப்பட்டது. இதனால் சந்தையில் வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்யமுடியாமல் வெளியில் வைத்து விற்பனை செய்யவேண்டிய நிலையேற்பட்டது.

எனினும் பின்னர் மாநகர சபை ஆணையாளர் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க பணிப் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது.

நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஏற்பட்ட கைகலப்பில் மாநகரசபை உறுப்பினர் ஒருவர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குறித்த உறுப்பினரை தாக்கியதாக கூறப்படுபவர் வைத்தியசாலை சென்று குறிப்பிட்ட உறுப்பினரிடம் மன்னிப்புக்கோரியதையடுத்து அவர் சமரசத்துக்கு வந்ததால் அது தொடர்பிலான வாபஸ் பெறப்பட்டது.

அத்துடன் மாநகர தொழில்நுட்ப உத்தியோகத்தரை தாக்கியதாக கூறப்படும் மாநகரசபை உறுப்பனர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்த நிலையில் அதனை ஏற்றுக்கொண்ட பணியாளர்கள் தங்களது பாதுகாப்பு தொடர்பில் உத்தரவாத்தம் வழங்கப்படவேண்டும் என கோரியதுடன் தங்களது பணிக்கு திரும்பியுள்ளனர்.

இதேநேரம் இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிருபுல் சோமசிங்க மாநகரசபை உறுப்பினர்களது பொலிஸ் பாதுகாப்பை வாபஸ் பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X