2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

கோப்பாய் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

Super User   / 2010 ஓகஸ்ட் 11 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் தலைமையில் இன்று (10) காலை பிரதேச செயலக பிரிவு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் உரையாற்றுகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டமை யாழ் மாவட்ட அபிவிருத்தியில் கணிசமான அளவு பங்காற்றக் கூடிய நிலையை உருவாக்கியுள்ளதாக கூறியதுடன் தமது வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தானவினதும் ஆலோசனைக்கமைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் யாழ் மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலர் பிரிவுகளில் 10 பிரதேச அபிவிருத்திக் குழுக்களுக்கு தான் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தமக்கு ஒப்படைக்கப்பட்ட பாரிய பொறுப்பை நிறைவேற்றுவதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

"கடந்த கால யுத்த சூழலில் எமது மக்களுக்குத் தேவையான உதவிகளை மக்களோடு மக்களாக நின்று ஈ.பி.டி.பி. யினராகிய நாம் சேவையாற்றி வந்ததை அனைவரும் அறிவார்கள். அதேபோல் நாம் என்றும் மக்களோடு மக்களாக இருந்து மக்களுக்குச் சேவை ஆற்றுவதற்கு தயாராக இருக்கின்றோம். இதேவேளை, பயங்கரவாதம் அற்ற நிலையில் தற்போது மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே எமது மக்கள் சொந்தக் காலில் நின்று தமக்கான தொழிலை தாமே மேற்கொள்வதற்கு தன்னாலான உதவிகளை மேற்கொள்வதாகவும் எமது மக்களின் வாழ்வதாரத்தை மேம்படுத்த அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்" எனவும் உதயன் கேட்டுக் கொண்டார்.

இக்கலந்துரையாடலில் கோப்பாய் பிரதேச செயலாளர் மோகன்ராஜ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கோப்பாய் பிரதேச பொறுப்பாளர் ஐங்கரன், அச்சுவேலி பிரதேசப் பொறுப்பாளர் தர்மராஜா திணைக்களத் தலைவர்கள், கிராம சேவையாளர்கள் உட்பட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--