Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 12 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
வவுனியா தெற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் 138 பேரில் 13 பேர் வவுனியா வடக்கு வலயத்திற்கும் மீதியானவர்கள் அனைவரும் மடு கல்வி வலயத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் உத்தரவுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இந்த இடமாற்ற உத்தரவினை ஏற்றுக்கொள்ளமுடியாது என சில ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, குறித்த இடமாற்றம் ரத்து செய்யப்படவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.
முறையான கொள்கையின் அடிப்படையில் இடமாற்றங்கள் பின்பற்றப்படவேண்டும் என குறிப்பிடும் அவர், ஒவ்வொரு மாவட்டத்திலும் இடமாற்ற சபைகள் உள்ளது. அதன் ஊடாகவே இடம்பெற வேண்டிய கொள்கையினை மீறி இடமாற்றங்கள் நடைபெற்றுள்ளன. மாணவர்கள் கல்வி விடயத்தில் எமக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஒரு முறையான திட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர்களுடைய இடமாற்றங்கள் நடக்கவேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம் எனவும் ஸ்ராலின் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago