2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வவுனியா நீதிமன்ற வளாகத்தில் வெடிபொருட்கள்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

வவுனியா மாவட்ட நீதிமன்ற வளவினுள் கடந்த திங்கட்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நீதிவான் எம்.கணேசராசா தெரிவித்தார்.

நீதிமன்ற வளவில் உள்ள மரப்பலகைக்கு கீழே உரப்பை ஒன்றில் இந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர். கைத்துப்பாக்கி, அதற்குரிய ஒரு தொகை ரவைகள், கிளேமோர் குண்டுகள் போன்றன இதில் அடங்கியிருந்தன.

வழக்குகளின் தடயப் பொருட்களாக, வெடி பொருட்கள் கொண்டுவரப்பட்டு நீதிமன்ற களஞ்சியசாலையில் வைக்கப்படுவது வழக்கம். எனினும், அப்பொருட்கள் யாவும் பாதுகாப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட பொருட்கள், நீதிமன்ற விடுமுறை காலத்தில் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து நீதிமன்ற ஊழியர்கள் சிலரிடமிருந்தும் கடமையில் இருந்த பொலிஸாரிடமிருந்தும் வாக்கு மூலங்களும் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .