2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

பொத்துவிலில் கஞ்சா கடத்தியவர் கைது

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.சரவணன்)

பொத்துவில், குலானுகே பிரதேசத்தில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று புதன் கிழமை இந்நபர் கைது செய்யப்பட்டதுடன் அவரால் ஆட்டோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கஞ்சா போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றுக்கமையவே இந்த போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதாக பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்த குமார தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த பிரதேசத்தினூடாக பயணித்துக்கொண்டிருந்த ஆட்டோவை மடக்கிப் பிடித்த பொலிஸார், அதனுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருளை கைப்பற்றியதுடன் சந்தேக நபரையும் கைது செய்ததாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறினார்.

சம்பவத்தினை அடுத்து குறித்த சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து அவரை, எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியளில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொத்துவில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--