2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

கல்முனை பஸ் நிலைய கடைகளை மக்களிடம் கையளிக்குமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

மூன்று வருடங்களாகியும், கல்முனை மாநகர பொது பஸ்தரிப்பு நிலையக் கடைத் தொகுதி வியாபார நடவடிக்கைகளுக்காக மக்களிடம் கையளிக்கப்படாமல் இருப்பதையிட்டு விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர பஸ்தரிப்பு நிலையமும் அதனுடன் இணைந்த கடைத் தொகுதியும் கடந்த 2007ஆம் ஆண்டு கல்முனை மாநகர சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இருப்பினும், இந்நிகழ்வு இடம்பெற்று 3 வருட காலமாகியும் இன்று வரை இந்தக் கடைத்தொகுதிகள் திறக்கப்படாமல் மூடிக் கிடப்பதையிட்டு பயணிகளும், இப்பிரதேச வியாபாரிகளும் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த மூன்று வருட காலப்பகுதியில் மாநகர சபைக்கு இக் கடைத் தொகுதியின் ஊடாக கிடைத்திருக்கக்கூடிய வருமானங்கள் இல்லாமல் போய் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக கல்முனை மாநகர சபை உறுப்பினரான யூ.எல்.எம்.தௌபீக் கருத்து தெரிவிக்கையில், மாநகர சபை விரைவில் விலைமனுக் கோரல் மூலம் இக்கடைத் தொகுதியை வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திலே கூடுதாலான பயணிகள் தரித்து பயணிக்கும் கல்முனை பஸ் நிலையத்திலுள்ள இக்கடைத் தொகுதி, 3 வருடகாலமாக திறக்கப்படாமல் இருக்கும் விடயம் பயணிகளுக்கு மிக அசௌகரியமாக இருப்பதாக அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--