2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

இலங்கை அகதிகள் கப்பல் கனேடிய கடற்படைத் தளத்தை அடைந்தது

Super User   / 2010 ஓகஸ்ட் 13 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூற்றுக்கணக்கான இலங்கை அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற எம்.வி. சன் ஸீ எனும் கப்பல் கனேடிய கடற்படைத் தளமொன்றை அடைந்துள்ளது.
 

கனேடிய கடற்பரப்பிற்குள் பிரவேசித்த இக்கப்பலை கனேடிய கடற்படை மற்றும் பொலிஸ் ஹெலிகொப்டர்களின் பாதுகாப்புடன் கனடாவின் மேற்குப் பகுதியில் வன்கூவர் தீவிலுள்ள கடற்படைத் தளமொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டது.


சுமார் 90 நாட்களாக பயணம் செய்துகொண்டிருந்ததாகக் கூறப்படும் இக்கப்பலை பல வாரங்களாக அமெரிக்க மற்றும் கனேடிய அதிகாரிகள் கண்காணித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இக்கப்பலில் 490 பேர் இருப்பதாக கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக் டோவ்ஸ் கூறியிருந்தார்


அகதிகளை சிறைச்சாலைகளுக்கு ஏற்றிச்செல்வதற்காக ஜன்னல்கள் மறைக்கப்பட்ட பல பஸ்கள் இக்கடற்படைத் தளத்திற்கு வெளியே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. .
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--