2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

இராணுவ நீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதி அங்கீகரித்தார்

Super User   / 2010 ஓகஸ்ட் 14 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு  எதிரான முதலாவது இராணுவ நீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதி அங்கீகரித்துள்ளதாக  இராணுவப் பேச்சாளர் கேணல் துமிந்த கமகே தெரிவித்துள்ளார்.


ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ சேவையிலிருந்துகொண்டே அரசியலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணை நடைபெற்றது.

இதில் பொன்சேகா குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டதுடன் ஜனாதிபதியின் அங்கீகாரம் பெற்றபின் ஜெனரல் சரத் பொன்சேகாவின்  இராணுவ தரநிலை வாபஸ் பெறப்படும் என இராணுவ நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இதை ஜனாதிபதி அங்கீகரித்துள்ளார்.


  Comments - 0

  • Thilak Sunday, 15 August 2010 12:22 AM

    ஆளுங்கட்சிக்குச் சார்பாக அரசியலில் ஈடுபட்டிருந்தால்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X