2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

பேராதனை பூங்காவில் அதிசய பூ

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 15 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

பேராதனை பூங்காவில் ஆறு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் அதிசயமான ஓக்கிட் பூ பூத்துள்ளது. ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தினம் தோரும் வருகை தரும் பேராதனை பூங்காவிலே ஓக்கிட் இல்லத்துக்கு விஷேடமான இடமுண்டு.

இந்நிலையில், ஓக்கிட் இல்லத்துக்கு வெளியே பூத்துள்ள பெரிய அளவிலான இந்த ஓக்கிட் பூ பூப்பது மிக அரிதாகவே நிகழ்கின்றத் என பேராதனை பூங்காவின் பணிப்பாளர் கலாநிதி சிரில் விஜேசுந்தர தெரிவித்தார். பெரியளவில் பூத்துள்ள இந்தப் பூவானது சுமார் இரண்டு மாத காலத்துக்கு வாடாமல் நிலைத்து நிற்குமெனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--