Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இன்று மாலை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் கட்சி உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்றுமுன் தெரிவித்தார்.
சிறிகொத்தாவிலுள்ள கட்சி தலைமையகத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள இந்த விசேட சந்திப்பின் போது ஐ.தே.க.வின் பிரதி தலைவர் கரு ஜயசூரியவும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்காவும் தானும் இணைந்துகொள்ளவுள்ளதாக அவர் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவின் பெயர் கடந்த சில தினங்களாகவே முன்மொழியப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. (M.M)
Sudhagar Tuesday, 17 August 2010 06:33 PM
இது ஒரு நல்ல சந்திப்பு என நினைக்கிறேன்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .