2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

இரு சடலங்கள் மீட்பு

Super User   / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாந்தோட்டை கிரிந்த கடலில் படகு கவிழ்ந்தபோது காணாமல் போன இருவர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
 

கிரிந்த துறைமுகத்தில் நேற்று படகொன்று கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. காணாமல் போனவர்கள் இருவரின் சடலமே இன்று கடற்படையினரால் மீட்கப்பட்டன. அத்துடன் மற்றொரு சடலத்தையும் தேடிவருவதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் அதுல செனரத் டெய்லிமிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.


கிரிந்த துறைமுகத்திற்கு வந்த குடும்பமொன்றுக்கு உல்லாசப்பயணத்திற்காக கடற்படையினரால் வழங்கப்பட்ட படகொன்றே கடலில் கவிழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .