2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான முதலாவது இராணுவ நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி.யினர் இன்று நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். இதனால் நாடாளுமன்ற அமர்வுகள் சுமார் 5 நிமிடத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ சேவையில் ஈடுபட்டிருந்த போது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலாவது இராணுவ நீதிமன்றம் நிறுவப்பட்டது.

குறித்த நீதிமன்ற விசாரணைகளின் போது ஜெனரல் சரத் பொன்சேகா குற்றவாளியாக காணப்பட்டதை அடுத்து அவரது பதவி நிலையை குறைப்பதான தீர்ப்பு வழங்கப்பட்டது. இராணுவ நீதிமன்றத்தின் மேற்படி தீர்ப்பினை ஜனாதிபதி கடந்த சனிக்கிழமை அங்கீகரித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X