2026 ஜனவரி 07, புதன்கிழமை

சமிக்ஞையை மீறிய கார் வீதியை விட்டு விலகி கவிழ்ந்தது

Janu   / 2026 ஜனவரி 06 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் சமிக்ஞையை மீறிச் சென்ற கார் ஒன்று அஹுங்கல்ல, கல்பொக்க பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் அதில் பயணித்த யுவதி ஒருவர் சிறு காயமடைந்ததாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த காரை கொஸ்கொட பொலிஸ் வீதி தடையில் நிறுத்துமாறு சமிக்ஞை செய்த போதும் அதை மீறி பயணித்ததால் பொலிஸார் குறித்த காரை துரத்திச் சென்றுள்ளனர். 

இதன்போது, காரின் ஓட்டுநர் ஒரு குறுக்கு வீதிக்குள் காரை ஓட்டிச் சென்று, தனது வாகனத்தை மறைத்து வைத்திருந்து சிறிது நேரத்தின் பின்னர் காலி வீதிக்கு திரும்பியபோது, பொலிஸார் மீண்டும் வாகனத்தை நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளனர்.

அதையும் மீறி அதிவேகத்தில் சென்ற கார் , கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .