Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 18 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.பாரூக் தாஜுதீன்)
முன்னாள் விடுதலை புலி இயக்க பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை வெலிகந்த புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்புமாறு கொழும்பு மேலதிக நீதவான் தம்மிக்க லங்கா திலக உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர்களான் கந்தசாமி குணபாலன் , மாரிமுத்து திருச்செல்வம் ஆகிய இருவரையும் தமக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா பயங்கரவாத புலனாய்வு பிரிவு உதவி பொலிஸ் பரிசோதகர் விஜயரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் கைது செய்தனர்.
இவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட போது, விடுதலை புலிகளின்யின் பொலிஸ் பிரிவில் இணைவதற்கு முன் புலிகளின் செயற்பாடுகளில் பயிற்சி பெற்றிருந்தது தெரிய வந்தது.
இவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இவர்களை விடுதலை செய்யும் படி அல்லது புனர்வாழ்வுக்காக அனுப்பும் படி கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து இவர்கள் இருவரையும் வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டார்.
6 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago