2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

ஆறுகளின் முகத்துவாரங்களில் அணைக்கட்டுகள் அமைக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 18 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                                                                     (சந்துன் ஏ ஜெயசேகர)

ஆறுகளின் முகத்துவாரங்களில் அணைக்கட்டுகள் அமைப்பதால் கொழும்பில் அடிக்கடி வரும் வெள்ளபெருக்கை தடுக்க முடியும் என பொறியியலாளர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

இதை கருத்தில் கொண்டு நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறி பால டி சில்வா கொழும்பு மாவட்டத்தில் உள்ள சகல  முகத்துவாரங்களிலும் அணிக்கட்டுக்களை அமைப்பதற்கான திட்டம் ஒன்றை தயாரிக்கும் படி நீர்ப்பாசன பொறியியலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

முகத்துவாரத்தில் மணல் குவிவதனால் நீர் ஆற்றுக்குள் பாயாமல் தடுக்கப்பட்டு வெள்ளம் ஏற்படுகின்றது எனவும் மண் குவிவதை தடுக்க அணைகள் கட்டப்பட்ட  வேண்டும் எனவும் கூறப்பட்டது.

பொல்கொட வாவியின் நீரும் இதே காரணத்தினால் தான் கடலில் பாய்வது தடுக்கப்பட்டு வெள்ளம் உண்டாகுவதாக பொறியியலாலர்கள் விளக்கினர்.

பொல்கொட வாவியினுள் பாயும் சகல அருவிகளையும் உடனடியாக சுத்தம் செய்யுமாறு அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--